Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் சுமார் 100 மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்கை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமை காலையும் இடம்பெற்றன.
'முனாஸ் நற்பணிமன்றம்' எனும் பெயரில் பிரதேச சபை உறுப்பினர் செயற்படுத்தி வரும் அமைப்பினூடாகவே ஏழை மாணவர்களுக்கு மேற்படி அப்பியாசக் கொப்பிகளும் கற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்கு நேற்றைய தினமும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களுக்கு இன்றைய தினமும் இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளின்போது, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் மற்றும் முனாஸ் நற்பணி மன்றத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சுனாமி 07 ஆம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி பாண்டிருப்பு பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களை - அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று திங்கட்கிழமை சந்தித்து உணவுகள் வழங்கியதோடு, பாடசாலை உபகரணங்களினையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கல்முனைத் தமிழ்ப் பிரிவு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். உதயகுமார், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம். சமட், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நண்பன் Monday, 26 December 2011 08:03 PM
வாழ்த்துக்கள் முனாஸ் அவர்களே உங்கள் நற்பணி என்றும் மேலோங்க இறைவன் துணை புரியட்டும்.
Reply : 0 0
ஹமீட் Monday, 26 December 2011 08:05 PM
இதுதான் சேவை மக்களின் தேவை. என்ன, அது எப்ப வேண்டும் என்பதனை அறிந்து சேவையாற்றும் அன்பு சகோதரர் அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
சிறாஜ் Monday, 26 December 2011 08:19 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
சேனையூரான் Tuesday, 27 December 2011 12:10 AM
சின்னஞ்சிறுசுகளின் மனங்களில் இருக்கும் சந்தோசம் பார்க்க உண்மையில் வெற்றியான விடயம் வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பணியினை....
Reply : 0 0
zaro Tuesday, 27 December 2011 12:12 AM
இது பிய சேனைக்கும் முனாசுக்கும் எழுதிக்கொடுத்த சேவையா,,?
Reply : 0 0
chenaiooran Tuesday, 27 December 2011 12:25 AM
sevai nalla vidayam. anal athanai photto pidiththu ellorukkum kattuvathu, attaya thookki meththayla vechchamari irukku.
Reply : 0 0
சர்ஜூன் Tuesday, 27 December 2011 01:20 AM
chenaiooran உமக்கு பொறாமை பிடித்து தலைக்கு மேலே ஏறிவிட்டது என்று விளங்குது இது நல்ல சேவை செய்திருக்கும் அவரை வாழ்த்துவதை விட்டு வைக்கோல் கந்துக்கு பக்கத்தில் படுக்கும் நடையன் போல பேசுவது நல்லா இருக்கா,,,,,....
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 27 December 2011 01:22 AM
நல்லது செய்ய விடுங்கள். அது மற்றவர்களை உற்சாக மூட்டும் செயலாக அமைய கட்டாயம் பிரபல்யபடுத்தனும். எனவே குரைப்பவர்கள் நிறுத்துங்கள். ஊக்கம் மட்டும் கொடுங்கள்.
Reply : 0 0
siraj Tuesday, 27 December 2011 05:23 AM
வாழ்த்துக்கள் முனாஸ்
Reply : 0 0
chenaiooran Wednesday, 28 December 2011 04:24 AM
சர்ஜூன் நீங்கதானா director editor ellam,neenga sevaya innum parkkala pola. photokkuthan nirayappaer seva sairanga theriyuma? தேங்க்ஸ் .சர்ஜூன்
Reply : 0 0
siraj Wednesday, 28 December 2011 09:48 PM
சேனையூரான் ஹி ஹி ஹி வக்காளத்தும் வசூரமும் தலைக்கு மேல் உங்களிடம் ஏறியுள்ளது. மற்றவர்களுக்கு உதவுங்கள். அல்லது சும்மா இருங்கள் சரியா......? உதவும் உள்ளத்தினை பாராட்டுங்கள்..
Reply : 0 0
அலிரஹ்மான் Friday, 30 December 2011 06:16 AM
சிறந்த சேவை தொடர்ந்து செய்து வாருங்கள் உடன் பிறப்பே கருத்து வேறுபாடென்னும் கரையான்கள் உங்களுக்கு தொல்லை தந்தாலும் தயங்காமல் தொடருங்கள் உங்களுக்கு இறைவன் துணை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
22 minute ago
2 hours ago