Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 31 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிறீன்பீல்ட் வீட்டு திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் கே.பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.டீ.ஏ.தௌபீக் மற்றும் பிரதி வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான கிறீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திலேயே இப்பாடசாலை உருவாக்கப்பட்டுள்ளது.
தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையான வகுப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பாடசாலையில் சுமார் 120 மாணவர்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
M.Reesath Qatar Saturday, 31 December 2011 06:53 PM
கட்டிட திறப்பு விழா என்றால் திறந்த கட்டிடத்தின் ஒரு போட்டோவையும் காணோமே
Reply : 0 0
razeek kalmunai Saturday, 31 December 2011 09:19 PM
ரிசாத் நிதானமாக பாருங்கள். இது கட்டட திறப்பு விழா அல்ல பாடசாலை திறப்பு விழா.
Reply : 0 0
M.Reesath Qatar Saturday, 31 December 2011 11:38 PM
ராசீக் அப்படி என்றால் பாடசாலை விளம்பர பலகை மட்டும்தானே இருக்கு. இதைத்தான் பாடசாலை என்கிறதோ ?
Reply : 0 0
uuran Sunday, 01 January 2012 01:29 AM
ஆமாம் பெயர் பலகையும், நினைவுக் கல்லும்தான் இருக்கு எல்லா போட்டோவிலும்...!
Reply : 0 0
gaf Sunday, 01 January 2012 01:48 AM
எம்பி திறக்கும் நினைவு கல்லுக்கு பின்னால் தெரியும் கொட்டில்தான் பாடசாலை.
Reply : 0 0
haja Sunday, 01 January 2012 04:24 AM
ஹிலால் ஆசிரியர் எங்கே ?
Reply : 0 0
uuran Monday, 02 January 2012 12:14 AM
பாடசாலை கட்டிடத்தைக் காணவில்லயே..! என்ன ஆச்சரியம் இப்படி ஒரு பாடசாலை..?
Reply : 0 0
hameed Thursday, 05 January 2012 05:19 AM
கட்டிடம் இல்லை. கொட்டிலில் ஒரு ராயல் வித்தியாலயம் கரிஷ் எம்.பி யால் மட்டும்தான் இப்படியான சானைகளை செய்ய முடியும்.
Reply : 0 0
kalmunaiyaan Friday, 06 January 2012 05:22 AM
தலைவர் ஆரம்பித்து விட்டாறையா?
Reply : 0 0
ilyas Saturday, 07 January 2012 12:37 AM
தம்பி ஹரிஸ் என்ன வாப்பா இது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
2 hours ago