Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 07 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஜகான்)
பொத்துவில் அல்கலாம் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஒன்றியம், பாக்கியவத்தை கல்வி அபிவிருத்தி சங்கம் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் கூட்டம் நேற்று வெள்;ளிக்கிழமை பொத்துவில்-14 கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில இடம்பெற்றுது.
பொத்துவில் அல்கலாம் வித்தியாலயத்தில் உயர்தரம் ஆரம்பித்தல்;, பாக்கியவத்தை பகுதியில் புதிய பாடசாலை ஆரம்பித்தல்;, 1000 பாடசாலை திட்டத்தில் அல்கலாம் வித்தியாலயத்தை உள்வாங்கல் தொடர்பாக ஆராய்வதற்காக இக் கலந்துரையாடல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ.முத்தலிப், அகமட்கியாஸ், பொத்துவில் கோட்டக் கல்வி;ப பணிப்பாளர் ஏ.ஏஅஸிஸ், கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முகைதீன பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.வாசித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதன்போது, பாக்கியவத்தை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்,
பொத்துவில் அல்கலாம் வித்தியாலயத்தில் க.பொ.சா/ தரத்திற்கு தோற்றும் மாணவர்கள் க.பொ.த உ/தரத்தை தொடர்வதற்கு 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அயல் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல மாணவர்கள் இடை விலகளுக்குள் உட்படுகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் சுமார் 3000 குடும்பங்கள் வசிக்கின்றனர். 2 ஆரம்ப பாடசாலை மாத்திரம் காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். ஆகவே பாக்கியவத்தை பகுதியில் புதிய பாடசாலை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் பாக்கியவத்தை பகுதியில் புதிய பாடசாலை ஆரம்பித்தல், 1000 பாடசாலை திட்டத்தில் அல்கலாம் வித்தியாலயத்தை உள்வாங்க நடவடிக்கை எடுத்தல் பொத்துவிலுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
மேலும் பாக்கியவத்தை கல்வி அபிவிருத்தி சங்கம் மகஐர் ஒன்றை அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஒப்படைத்தது.
samsun Saturday, 07 January 2012 06:37 PM
varaverkathakathu
Reply : 0 0
A.N.M. Rizath Saturday, 07 January 2012 07:56 PM
The advance level should be need at AL KALAMVIDIYALYA.
Reply : 0 0
m a abdul salam Sunday, 08 January 2012 02:34 AM
இது ஒரு நல்ல முயற்சி. மனதார பாராட்டுகிறேன். இதற்காக யார் யாரெல்லாம் முயத்சி செய்தார்களோ அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன். கையர் ஹபீஸ் அப்துல் சலம் கட்டார்
Reply : 0 0
M.B.Habeeba Sunday, 08 January 2012 04:54 AM
நல்ல விடயம் இறைவன் உதவி இவ் அமைப்புக்கு கிடைக்க பிராத்திக்கிறேன்.
Reply : 0 0
written byYesar Wednesday, 11 January 2012 01:57 AM
Ifeel very happy to this try to make sure the school at AL-KALAM Vidiyalaya Pottuvil
Reply : 0 0
ameerudeen Wednesday, 11 January 2012 09:23 PM
மாசா அல்லாஹ். நல்ல முயற்சி. சொல்வதோடு நின்றுவிடாமல் செய்கையில் காட்டுங்கள். எங்கள் ஒத்துழைப்பும் எப்போதும் உங்களுக்குண்டு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago