Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 22 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கும் பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் அமர்வு நேற்று பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
'அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் அல்மனாரில் நூற்றாண்டு விழா' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பாடசாலையின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இப்பாடசாலையின் அதிபர் எஸ்.எம். எம்.எஸ். உமர்மௌலானா தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் அல்மனார் மத்திய கல்லூரியினால் வெளியிடப்பட்ட 'அல்மனார் நியூஸ்' என்ற கை ஏட்டின் முதலாவது பிரதி அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் டாக்டர் எஸ்.எம். எம்.எஸ். உமர்மௌலானாவினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.ஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago