Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 24 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தவிசாளரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை, உதவி தவிசாளர், எம்.ஐ.கலீலுர்றஹ்மான் உட்பட திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் 2011ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக திணைக்களங்கள் வாரியாக ஆராயப்பட்டதுடன் 2012ஆம் ஆண்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும இடம்பெற்றன.
ummpa Tuesday, 24 January 2012 08:02 PM
வாக்குபெற்றுகொண்ட மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாரமாட்டர்களோ ? இன்னும் தேர்தலுக்கு வெகு நாள் இருக்குதாக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago