2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனையில் மின்வெட்டு

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய மின் பொறியியலாளர் பிரதேசங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை, 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அம்பாறை மின் பொறியியலாளர் பிரதேசங்களான அம்பாறை, கொண்டவட்டுவான், நாமல்ஓயா, இங்கினியாகல, உகண, மகாஓயா, பதியத்தலாவ, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 11ஆம், 13ஆம், 5ஆம், 17ஆம், 21ஆம் கொலனிகள், கல்மடுவ, தீகவாபி, ஹிங்குராண, தமன, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ மற்றும் தொம்பககாவெல ஆகிய பிரதேசங்களிலும்,

மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசங்களான மண்டூர், சங்கர்புரம், கணேசபுரம், பெரியபோரைதீவு, கோவில்போரைதீவு, அம்பிலாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை. புண்டாரியவெளி, தும்பங்கேனி. திக்கோடை, 39ஆம் கிராமம், தாந்தாமலை, மகிழுர், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா, எருவில், சிவபுரம், குருமண்வெளி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், முனைத்தீவு, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிப்பாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம். புதுக்குடியிருப்பு, தாழங்குடா, காத்தான்குடி, கல்லடி, சவளக்கடை, வீரச்சோலை, துறைநீலாவணை மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசங்களும்,

கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசங்களான கல்முனை, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைகாடு, கல்முனைக்குடி, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவண்டியாமடு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, 15ஆம் கொலணி, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், அட்டாப்பள்ளம் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களில் மேற்குறித்த மின் பொறியியலாளர் பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Wednesday, 08 February 2012 07:57 PM

    அவசர திருத்த வேலை. இப்போது, அவசரம் இல்லாமல் எதுவித பாவனையாளர் முன்னறிவத்தலுமின்றி அடிக்கடி மின் துண்டிப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .