Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பெருநாவலர் வித்தியாலய வகுப்பறைக்கட்டிடம் இடிந்துவிழும் அபாயநிலையில் உள்ளதால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள இப் பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் 9 வரையான வகுப்புகள் உள்ளதுடன் 224 மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். இப் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடம் ஒன்றின் கூரைகள் உடைந்தும் கட்டிடத்தின் தரை, சுவர்கள் வெடித்து இடிந்துவிழும் அபாயமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இக்கட்டிடத்தில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மாணவர்கள் கற்றல் நடவடிக்கையை தொடர்வதற்காக இடவசதியற்ற வேறுகட்டிடமொன்றிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இப்; பாடசாலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டு மாடிக்கட்டிடம் அமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டு 4வருடங்களாக உள்ளது.
இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாடசாலையில் போதிய நிலம் இல்லாத காரணத்தினால் அருகிலுள்ள தனியார் காணியை வாங்கிதந்தால் உடன் இரண்டு மாடிக்கட்டிடம் கட்டித்தருவதாக அரசியல்வாதி ஒருவர் வாக்குறுதி வழங்கியதையடுத்து பெற்றோர் அந்த காணியை உரியவிடம் பணம் கொடுத்து வாங்கி பாடசாலைக்கு வழங்கினர்.
கிழக்கு மாகாணசபையின் பிஎஸ்டிஜி திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா செலவிலான இக்கட்டிடத்திற்கு முதற்கட்டமாக 39 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு நிர்மாண வேலைகள் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
எனவே இதுத் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி மாணவர்கள் கற்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு
மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
raaris Friday, 10 February 2012 01:06 AM
அக்கறை(யான) அபிவிருத்தி அமைச்சரின் கண்ணில் இது படவில்லயா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago