Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். மாறன்)
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசத்தில் சீரற்ற கால நிலையினால்; மழையுடன் கூடிய இடிமின்னலினால் தாக்கத்தினால் பலர் சிறுகாயங்கக்குள்ளானதுடன் 100 இற்கு மேற்பட்ட தொலைக்காட்சி, களணி, மற்றும் மின்சார உபகரனங்கள் சேதமடைந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கிழக்கில் தற்போது சீரற்ற காலநிலையினால் சில நாட்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்துவருகின்றது.
புதன்கிழமை காலை 10 மணியளவில் இடிமின்னலுடன் கடும்மழை பெய்தது. இதன்போது திடீரென பாரிய மின்னல்
தாக்குதல் ஏற்பட்டபோது வீடுகளில் சமயலறையில் கிரைண்டர், மிக்சி போன்றவற்றை பாவித்துக் கொண்டிருந்த பெண்கள் பலர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பலவீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனபெட்டிகள் முதலானவை சேதமடைந்தன. சில வீடுகளில் மின்சார வயர்கள் எரிந்துள்ளன.
இதேவேளை பல அரச மற்றும் அரசசார்பற்ற காரியாலயங்களில் கணனி மற்றும் மின்சார உபகரணங்களை பாவித்துக் கொண்டிருந்த பலர் மின்னல் தாக்குதலினால் தூக்கி வீசப்பட்டு காயங்களுக்கு ஆளாகினர்.
வீடுகள், காரியாலயங்களில் உள்ள றிப்சுவிச்சுக்கள் செயற்படாமல் போனதுடன் மின்னலின் போது மின்சார உபகரணங்களை பாவித்துக் கொண்டிருந்தமை போன்றவை மின்னல் தாக்குதல் ஏற்பட காரணமாகும் என மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Electrician Friday, 10 February 2012 08:41 AM
இதை தவிர்ப்பதற்கு உங்கள் வீட்டு (Earth Wire) எர்த் வயர் (நிழதொடுப்பு வயரை) சரியான முறையில் சரியான (Earth Pipe)பைப்புடன் இணைத்து நிலத்தில் பதிக்கவும்.
எல்லா மின் சாதனங்களும் எர்த் வாயருடன்
இணக்கபட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளவும்.
மற்றும் சரியான தரமான ரிப் ச்விட்ச்களை இணைத்து உங்கள் மின் இணைப்பை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்
Reply : 0 0
latha Monday, 13 February 2012 04:18 AM
ஏர்த் வயர் சரியாய் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் அடுத்த முறை மின்னல் அடிக்கும் சந்தர்ப்பத்தில் மின்சார உபகரணங்கள் பாதிப்பு ஏற்ப மாட்டாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
7 hours ago