2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 6ஆவது பொலிஸ் நடமாடும் சேவை கெப்சோ அமைப்பின் அனுசரணையுடன் சம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள அல்ஜெனீஸ் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சமூக பொலிஸ் சேவை பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.எல்.எம்.சம்சுதீன், கெப்சோ அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்றாட், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், உதவி சுகாதார வைத்திய அதிகாரி திலானி விக்ரமசிங்க, கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.இல்லியாஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது  மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.  சம்மாந்துறை சுகாதார வைத்திய சேவைகளும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மரணப் பதிவுகள், பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .