Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கனேடிய பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணருமான மேகன் போஸ்டருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமிலிற்கும் இடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திற்கு கனேடிய பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணருமான மேகன் போஸ்டர் விஜயம் செய்திருந்த நிலையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. கொம்டெக் கல்வியகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் பிராந்திய அமைப்பாளர்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்றது.
sahan Thursday, 16 February 2012 03:05 PM
வாழ்த்துக்கள் சார்..............
என்றும் உங்கள் பணி தொடர வாழ்துக்கள் .....
Reply : 0 0
செம்பகம் Thursday, 16 February 2012 03:23 PM
எல்லாம் நல்லதுதான். அது என்ன ஐயா இருவருக்குமிடையில் மோட்டின் விசுரு கருவிய வைத்துயிருக்கியள். உங்களை பாதுகாக்கவா?
Reply : 0 0
SMT Thursday, 16 February 2012 06:55 PM
இளைஞ்சர் காங்கிரசில் முதியவர்கள் இடம்பிடிப்பது பொதுவாக நல்லதல்ல. சந்திப்பின் பின் ஏதாவது நல்லது நடக்குமா அல்லது ?
Reply : 0 0
pakalavan Thursday, 16 February 2012 09:43 PM
கௌரவ ஜமீல் அவர்களே,
இராஜ தந்திர ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் நமது சமூகம் சார்ந்த செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது.
விமானத்தில் இருந்து இறங்கி பாதையால் நடந்து வரும் போது கதைத்துக்கொண்டு வருவது ஒரு செய்தியாகும் என்றால் உங்களது கொம்டெக்கில் வைத்து சமூகம் சார்ந்த விடயங்களை பேசுவது சிறந்த செய்தியே. இளையோரை சற்று அனுபவம் உள்ளோர் வழிநடாத்தினால் அந்த வழி சிறப்பாய் அமையும். குறை காண்போருக்கு மோன்டீன் கூட கண்ணுக்கு தென்படும். சகோதரா உன் பனி தொடரட்டும் ....
Reply : 0 0
piththan Friday, 17 February 2012 08:51 AM
நல்ல பணி தொடரட்டும். உங்களை விமர்சிப்பவர்கள் நாளை நேசிப்பார்கள். அல்லது ஒரு சில அரசியல்வாதிகள் கொடுக்கும் காசிக்கு தொடர்ந்து விமர்சிப்பர்கள்.
Reply : 0 0
jes Friday, 17 February 2012 04:09 PM
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்கள் துடிப்பான செயற்பாட்டால் எவ்வளவோ சமூகத்திக்கு கிடைத்துள்ளது.
Reply : 0 0
Anver M. Mustapha Saturday, 18 February 2012 01:58 AM
Excellent Job, congrats!
Reply : 0 0
***®²Í²¿È ¿°¾Í***siro Saturday, 18 February 2012 05:44 PM
கௌரவ ஜமீல் அவர்களே, உங்கள் பணி ஓகே.
ஒன்றை மட்டும் சொல்லலாம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
Reply : 0 0
sainthamaruthuran Monday, 20 February 2012 02:59 PM
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago