2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைச்சர் பஷில் தலைமையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்திலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 21 February 2012 07:50 PM

    அபிவிருத்தி குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் (Agenda) பொதுமக்களுக்கும் தெரிய வருமா? தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தியில் இனவிகிதாசாரம் தேவை என வலியுறுத்துமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .