Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 13 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சுக்ரி)
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலுச் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் கரையோர வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்தார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய கள நிலவரங்களை இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
இந்த விஜயத்தின் போது சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்விலும் உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடடலில் அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தமது பிரதேச வர்த்தக மேம்பாட்டுக்கு தொடர்பான வேலைத்திட்டங்களை விளக்கினர்.
இப்பிரதேசத்தின் வர்த்தக மேம்பாட்டுக்கு தேவையான திட்ட அறிக்கையை ஆசிய மன்றத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இடம்பெற்ற உயர் ஸ்தானிகரிடம் கையளித்தார்.
இதேவேளை, உயர் ஸ்த்தானிகர் சீமா இலாஹி பலூச் இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது 1990ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் 103 பேர் தொழுகையின் போது படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசலை நேரில் சென்று பார்வையிட்டார்.
Avathaani Thursday, 15 March 2012 12:35 AM
முஸ்லீமாக இருந்து முஸ்லிம் பெண் மார்க்கத் தலைவர்களோடு ஒட்டி உறவாடுவது கவலையை அளிக்கிறது.........
அந்நிய மத முக்கியஸ்தர் என்றால் பரவாயில்லை...
Reply : 0 0
zeefa Thursday, 15 March 2012 07:13 PM
ஹலோ அவதானி இந்த பெண் பார்பதுக்கு முஸ்லிம் போல தெரியுதா , வெட்கமாக இருக்குது.
Reply : 0 0
ashraff Tuesday, 20 March 2012 06:18 AM
ஹலோ அவதானி !உங்கள் பார்வையில் கோளாறு உள்ளது. நின்று உரையாடுவதற்கும் ஒட்டி உறவாடுவதற்கும் வேறுபாடு உள்ளது .மார்க்கத்தின் விசாலமான அணுகு முறைகளை அறிய முயலுங்கள்.
Reply : 0 0
nusky Monday, 26 March 2012 02:38 AM
என்ன கொடும சரவணா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago