2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாலைதீவு பிரதி அமைச்சர் - மாகாண சபை உறுப்பினர் சந்திப்பு

Super User   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாலைதீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் மாலைதீவின் மனித வள, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா ரிபாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தற்போது மாலைதீவிலுள்ள மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தெரிவித்தார்.

மாலைதீவு பிரதி அமைச்சருடனான சந்திப்பில் மலேசிய, மலாக்க மாநில முதலமைச்சரின் ஆலோசகரும் கே.வை.எம். பல்கலைக்கழக உப வேந்தருமான டத்தே சருனி ஜுடியும் கலந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .