2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் பிரதேச சபை புதிய இடத்திற்கு இடமாற்றம்

Kogilavani   / 2012 மே 14 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேச சபை காரியாலயம் தம்பிலுவில் வீ.சி வீதியில் உள்ள பிரதேச சபை புதிய கட்டிடத்திற்கு எதிர்வரும் 17ஆம் திகதி மாற்றப்படவுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் வி.புவிதராஜன் தெரிவித்தார்.

தற்பொழுது திருக்கோவில், தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வருகின்ற இப் பிரதேச சபை காரியாலயத்தில் போதிய இடவசதியின்மையினால் தம்பிலுவில் வீ.சி. வீதியில் உள்ள் யுனெப்ஸ் நிறுவனம் இயங்கிவந்த சபைக்குரிய புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்படவுள்ளது.

இதேவேளை தற்பொழுது பிரதேச சபையாக இயங்கிவரும் கட்டிடம்; பொது நூலகமாக மாற்றப்படவுள்ளது என தவிசாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .