2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் சுற்றுலா விடுதி

Suganthini Ratnam   / 2012 மே 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் சுற்றுலா விடுதி அக்கரைப்பற்றில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு கால்நடை வைத்தியசாலை வைத்தியர் திருமதி எம்.கே.விஜயரத்தின தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை மீன்பிடி சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி  துரையப்பா நவரெட்ணராஜா,
அமைச்சின் செயலாளர் ரி.பத்மநாதன், அமைச்சின் கால்நடை சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் தவராஜா, விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் உகநாதன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன், மாவட்ட
கால்நடை வைத்தியர் எம்.சி.எம.;யுனைட், அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நந்தகுமார், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .