2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறை பட்டதாரிகளுக்கு நியமனங்கள்

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைக்கமைவாக சில நாட்களாக பிரதேச செயலக மட்டத்துடன் இணைக்கப்பட்டதான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட ஆறுமாத பயிற்சி நியமனங்களுக்கு அமைவாக கல்முனை மாநகர பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதேச செயலக பிரதேசத்துக்கு 192 பேரும் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரதேசத்திற்கு 84 பேரும் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேசத்திற்கு 70 பேரும் நியமனம் பெற்றுள்ளனர்.

இதற்கமைவாக கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 192 பட்டதாரிகளுக்குமான அறிவுறுத்தல் வழங்கும் கூட்டம் நேற்று மாலை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரிவு சார் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • paksha Tuesday, 12 June 2012 09:37 AM

    இவர்கள் ஆரம்ப சம்பளம் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .