2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அரசுடன் இணைந்து போட்டியிடுவதாயின் சில நிபந்தனைகளை மு.கா. விதிக்கும்: ஹக்கீம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களின் போதும் தமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளே தற்போது காணப்படுகின்றன என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (லங்காதீப)

You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 16 June 2012 02:04 PM

    நிபந்தனை எனும்போது பதவி சம்பந்தபட்டதாக இருக்கும். உரிமை, இருப்பு விடயமாக இருக்காது தானே? அஸ்ரப் நகர்,நுரைசோலை சுனாமி வீடுகள்,மூதூர் ஜபல் நகர் மூணாம் கட்டை மலை விவகாரம் என்பவற்றையேனும் கிழக்கு மாகாண தேர்தலை முன்னிறுத்திய நிபந்தனையாக கொள்வீர்களா?

    Reply : 0       0

    meenavan Saturday, 16 June 2012 02:10 PM

    அரசுடன்......?

    Reply : 0       0

    najath Saturday, 16 June 2012 05:00 PM

    அப்படியாயின் உமக்கு வோட்டு இல்லை...

    Reply : 0       0

    Iyaa Sunday, 17 June 2012 04:37 AM

    இன்னும் முடிவெடுக்கமுடியாமல் திண்டாடுகிறீர்கள்.

    Reply : 0       0

    Kanavaan Sunday, 17 June 2012 09:51 AM

    ஐயா ஹக்கீம் அவர்களே, நீங்கல் நீதி அமைச்சரா அல்லது அநீதி அமைச்சரா?

    Reply : 0       0

    sanas Sunday, 17 June 2012 06:14 PM

    இன்னும் அரசுடனா..? அய்யோ பாவம்... எப்பதான் நீங்க உருப்படப் போறிங்களோ? நிச்சயம் உங்களுக்கு பதவி உண்டு அய்யா...

    Reply : 0       0

    naleemmohamed Monday, 18 June 2012 05:22 PM

    ஐயா உங்கள் வியாபார சீசன் நடக்கட்டும் உங்கள் வியாபாரம்.

    Reply : 0       0

    suhaib Tuesday, 19 June 2012 08:15 AM

    உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சியம் நல்லது நடக்கும். அல்ஹம்துலில்லாஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .