2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சம்மாந்துறைக்கு விஜயம்

Super User   / 2012 ஜூலை 15 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

2013ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சிக்கான வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை அல் – அஸ்ஹர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கணினி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காகவே இவர் சம்மாந்துறைக்கு விஜயம் செய்தார்.

இந்நிகழ்வில் தேசத்திற்கு மகுடம் தேசிய குழுவின் தலைவரும் தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், பீ.எச்.பியசேன, சரத் வீரசேகர மற்றம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் ஆகியோர் கணினி நிலையத்திற்கான அடிக்கல்லினை நட்டினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .