2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண கொள்கை பரப்பு செயலாளராக சட்டத்தரணி பஹீஜும் மாகாண இணைப்பாளராக உவைஸும

Super User   / 2012 ஜூலை 31 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ், ஏ.ஜே.எம்.ஹனீபா)

தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண கொள்கை பரப்பு செயலாளராக சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டேலில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் மாவட்ட குழு கூட்டத்திலே கட்சி  தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சட்டத்தரணி பஹீஜிற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட இவர் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டார். எனினும் கடந்த மார்ச் 16ஆம் திகதி தேசிய காங்கிரஸ் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இவர், ஒரு சமூக செயற்பாட்டு ஆர்வளருமாவார்.

இதேவேளை, தேசிய காங்கிரஸில் அண்மையில் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான யூ.எல்.எம்.உவைஸ் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Aboo Fathh Tuesday, 31 July 2012 11:46 PM

    இப்போதாவது கொங்கிரஸ் உருப்படட்டும்!

    Reply : 0       0

    vaasahan Wednesday, 01 August 2012 07:56 AM

    நான் நினைக்கின்றேன் இது சமூகத்துக்கு நல்லது. இனியாவது காங்கிரஸ் உருப்படட்டும்.

    Reply : 0       0

    ibnuaboo Wednesday, 01 August 2012 12:22 PM

    எந்த காங்கிரஸ்?

    Reply : 0       0

    uwais Thursday, 02 August 2012 02:17 AM

    முஸ்லிம் காங்கிரஸ் உருப்படும்

    Reply : 0       0

    janoovar Thursday, 02 August 2012 02:52 AM

    ஹா ஹா ஹா ஹா என்ன காங்கிரஸ் புரியல சரியா சொல்லனும் அக்கரைப்பற்று குதிரைக்காங்கிரஸ்.

    Reply : 0       0

    pasha Thursday, 02 August 2012 09:45 AM

    அமைச்சர் அதாவுல்லாவின் மதிநுட்பமான வேட்பாளர் தெரிவு காரணமாக இம்முறை முன்னாள் அமைச்சர் கவுரவ உதுமாலெப்பை முதலமைச்சர் ஆவது 90மூ உறுதியாகி விட்டது.

    Reply : 0       0

    S.Sinasudeen Sunday, 02 September 2012 08:01 AM

    முஸ்லிம் காங்கிரஸ் உருப்படும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .