2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஜனவரி 03 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


2015ஆம் ஆண்டு புதுவருடத்தையொட்டி அம்பாறை மாவட்ட செயலகத்தினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த, அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வியாழக்கிழமை (01) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 'ஆசியாவின் ஆச்சர்யமிக்க பொருளாதாரம்' இவ்வாண்டின் கருப்பொருளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் பொதுமக்களின் சேவகர்களாக, அவர்களை மதித்து அவர்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பொற்றுக் கொடுக்கின்ற பணியினை செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் நில் டி அல்வீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் நான்கு இனங்களைச் செர்ந்த இரண்டு மொழி பேசக்கூடியவர்கள் வாழ்கின்றனர் அவர்களிடத்தில் நான் எந்தவித பாகுபாடுகளும் இன்றி பணியாற்றுவதை பெரும் கௌரவமாக கருதுகின்றேன். அத்துடன், கடந்த வருடம் எம்முடன் இந்த மாவட்ட செயலகத்தில் இருந்து பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கின்றேன் என அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட செயலாளர் நில் டி அல்வீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர்களான எம்.ஐ.அமீர், கே.விமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பணிப்பாளர்கள் பிரதிப்பணிப்பாளர்கள், உதவிப்பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X