2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் சீர்செய்யப்படவில்லை: மக்கள் விசனம்

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா


வெள்ள நீர் வடிந்து ஓட வெட்டப்பட்ட வீதிகள் மற்றும் வடிகான் என்பன இதுவரை சீர் செய்யாமையினால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு விபத்துக்களும் ஏற்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலேயே வீதிகள் மற்றும் வடிகான் என்பன சீர்செய்யப்படாமல் உள்ளன.

அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஓலுவில் ஆகிய பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்கு வீதிகள் குறுக்காக வெட்டப்ட்டுள்ளதோடு வடிகான்களும் உடைக்கப்பட்டு பாதுகாப்பு மூடிகளும் அகற்றப்பட்டுள்ளன.

எனவே அட்டாளைச்சேனை பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன வெட்டப்பட்ட வீதிகளை செப்பனிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X