Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கமைய அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல், நகர அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நீர்வழங்கல் சபையினால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் முழுவதையும் 02 வருடங்களில் கடனாக செலுத்தும் சலுகையை ஏற்படுத்துவது தொடர்பிலும், புதிய நீர் இணைப்புக்களை தாமதமின்றி வழங்குவதற்கும் அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், அட்டாளைச்சேனை சம்புக்களப்பு மற்றும் பெரியகளப்பு வடிச்சல் திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் அதற்கான திட்ட அறிக்கையை தாமதமின்றி வழங்குமாறு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளைப் பணித்தார்.
வெள்ளப்பாதுகாப்பு வேலைத்திடடம், வடிகான் அமைப்பு தொடர்பிலும் அனர்த்த முகாமைத்து அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இக்கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago