2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அஞ்சல் அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சிப் பட்டறை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கை, தபால் திணைக்களம் மிகக் குறுகிய காலத்துக்குள் தொழில்நுட்ப துறையில் துரித வளர்ச்சியடைந்துள்ளதாக கிழக்கு மாகாண, பிரதி அஞ்சல் மா அதிபதி வி.விவேகானந்தலிங்கம், ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தார்.


அம்பாறை, அக்கரைப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான இருநாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை, சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.


இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் தான் கடமையாற்றும் திணைக்களத்துக்கு விசுவாசமாக செயற்பட்டு நன் மதிப்பையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது தான் திணைக்களத்தின் இலக்கை அடைய முடியும்.


கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ள தபால் அலுவலகங்கள் அரசாங்கத்தின் 100 நாட்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதோடு உப தபால் அலுவலகங்களும் கணினிமயப்படுத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X