2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விழிகளுக்கு விருந்தாய் ஒரு மேடை நிகழ்ச்சி

Sudharshini   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிரீன் ப்ளோவர்ஸ் ஸ்ரீ லங்கா விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிகளுக்கு விருந்தாய் ஒரு மேடை நிகழ்ச்சி எனும் விழிப்புலனற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அக்கரைப்பற்று கடற்கரை வெளியில் திங்கட்கிழமை (10) நடைபெற்றது.


விழிப்புலனற்றோரினால் சாதிக்க முடியாது என்ற சமூகத்தின் தவறான பார்வையினை அகற்றி, சமூகத்திலுள்ள ஏனையவர்களை போன்று அவர்களுக்கும் கல்வி, சுகாதாரம், ஏனைய வசதிகள் சமமாக வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் நோக்கில், இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில், விழிப்புலனற்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் நாடகங்கள், பேச்சுக்கள், கவிதைகள், பாடல்கள், கலை, கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.


நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சாதனை படைத்த பல விழிப்புலனற்ற முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, திறமைகளை வெளிக்காட்டிய  மாணவர்களை பாராட்டியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.


கிரீன் ப்ளோவர்ஸ் ஸ்ரீ லங்கா விழிப்புலனற்றோர் அமைப்பின் தலைவர் எம்.ஏ.மிஸ்தாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயலாளர் செய்ஸூன் சலீம், இணைப்பதிகாரி ஏ.எம்.ஏ.சலாம், அனுசரணையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X