2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு முன்பாக புதன்னிழமை (11) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணிபுரியும் 39 வயதையுடைய பி.கோகுலரமணன், கடுங்காயங்களுக்குள்ளானதுடன் அவர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நேற்றைய தினமே மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இவ்விபத்தில் காயமடைந்த மற்றைய நபரான 30 வயதுடைய எஸ்.ரதிகரன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X