2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா,வா.கிருஸ்ணா

அம்பாறை மாவட்டத்தின் கடந்த 2013/2014ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதனை படைத்த வீரர்களுக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் விளையாட்டு வர்ணக் கௌரவிப்பு விழா வெள்ளிக்கிழமை (13) சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சின் உதவி செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அமைச்சின் உயர் அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள், பயிற்றுவிற்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களுக்கு சத்துணவுக்கான கசோலைகள், விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு அன்பளிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X