2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு 24 மணிநேர வைத்தியர்களை நியமிக்குமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 24 மணிநேர வெளி நோயாளர் பிரிவை ஆரம்பிப்பதுக்கு வைத்தியர்களை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம். ஜௌபர் இன்று (14) தெரிவித்தார்.


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 24 மணிநேர வெளி நோயாளர் பிரிவு குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதுக்கு இனங்க வைத்தியசாலைகளில் 24 மணிநேர வெளி நோயாளர் பிரிவை ஆரம்பிப்பதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் 5 வைத்தியர்கள் மட்டுமே சேவையாற்றுகின்றார்கள். 24 மணிநேர நோயாளர் பிரிவை ஆரம்பிப்பதற்கு வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் உடனடியாக 24 மணிநேர வெளி நோயாளர் பிரிவை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேவையான வைத்தியர்களை நியமிக்கும் பட்சத்தில் 24 மணிநேர வெளி நோயாளர் பிரிவு ஆரம்பிக்கப்படுமெனவும்; கூறினார்.


அலுவலகங்களில் வேலை செய்வோர் 24 மணிநேர வெளி நோயாளர் பிரிவின் ஊடாக சிகிச்சை பெற முடியும்.
எனவே அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர்களை நியமிக்குமாறு அரசாங்க உத்தியோகத்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X