2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இரு வணக்கஸ்தலங்களில் கொள்ளை

Sudharshini   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கம்பகாமாட்சி அம்மன் ஆலயம் மற்றும் நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் றாஜிஈ பள்ளிவாசல் ஆகியவை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச்சம்பவங்கள் இரண்டும் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேனைக்குடியிருப்பு கம்பகாமாட்சி அம்மன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆபரணங்கள், உண்டியல், ஒலிபெருக்கி போன்ற உபகரணங்கள் கொள்ளiயிடப்பட்டுள்ளதாகவும் மஸ்ஜிதுல் றாஜிஈ பள்ளிவாசலிலுள்ள ஒலிபெருக்கிச் சாதனங்கள், மின்விசிறி, பணவைப்பு உண்டியல் போன்ற பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டதோடு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் துரிதமாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X