2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இயங்குகின்ற தலைவரை தெரிவு செய்யவேண்டும்

Sudharshini   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ. தாஜகான்


பொத்துவில் பிரதேசத்துக்கான சரியான தலைமைத்துவத்தை மக்கள் தெரிவு செய்யவேண்டும். இயங்குகின்ற தலைவரையும் தெரிவு செய்யவேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காசிம் தெரிவித்தார்.


பொத்துவில் பிரதேசத்தின் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலையயின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (15) பொத்துவில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.


பொத்துவில் பிரதேசத்தின் தூரம் மற்றும் மக்களின் நலன், சுற்றுலாத் துறையினரின் வருகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பொத்துவில் வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தி மத்திய அரசுடன் இணைப்பதுக்குரிய முயற்சிகளை சுகாதார இராஜங்க அமைச்சர் ஹசன் அலி முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசசபையின் உறுப்பினர்களான எம்.எச். அப்துல் றகீம்,எம்.எம்.முபாரக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X