Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை மாவட்ட நல்வாழ்வு அமைப்பு (சுவாட்), நாவிதன்வெளி பிரதேச செயலகத்துடன் இணைந்து பிரதேசத்திலுள்ள பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்களை நாட்டி அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதன் முதற்கட்டமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை சந்தியிருந்து புதிய நெற்களஞ்சியம் வரையிலான வீதியின் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நிழல்தரு மரங்கள், புதன்கிழமை (18) நாட்டப்பட்டன.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் எஸ்.ரி.கமலநாதன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.கலீல், கிராம சேவை நிர்வாக உத்தியோகஸ்தர் எஸ்.றஞ்சன், சுவாட் அமைப்பின் திட்ட முகாமையாளர் என்.சுகந்தன், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுவாட் அமைப்பின் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago