2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முத்திரையிடாமல் நிறுத்தல் கருவிகளை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வர்த்தக நிலையங்களில் அளவை, நிறுவை கருவிகளுக்கு முத்திரை இடப்படாமல் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான 15 வர்த்தகளில் 11 வர்த்தகர்களுக்கு தலா   ஆயிரம் ரூபாயும் 4 வர்த்தகர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் (18) புதன்கிழமை அக்கரைப்பற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீலினால் விதிக்கப்பட்டது.


அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் கடந்த  9 திகதி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவ்; வர்த்தகர்கள் கைதுசெய்ப்பட்டனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் புதன்கிழமை(18) ஆஜர் செய்தபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X