2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்  

கமநல மத்திய நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி, பதவி உயர்வு பெற்றுச்சென்ற ஐ.எல்.ஏ.ஹார்லிக் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்துக்கு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.சி.நிஷாதி அபே சேகர  ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கமநல சேவை மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (19)இடம்பெற்றது.

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச கமநல சேவை மத்திய நிலையம், கமநல சேவைகள் குழு மற்றும் பிரதேச விவசாய அமைப்புக்களின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை கமநல சேவைகள் குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தருமான எஸ்.எல்.அபூதாலிப் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய உதவி ஆணையாளர் எஸ்.எம்.எம்.எஸ்.அஹமட் பாறூ மௌலானா, அட்டாளைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அப்துல் கனி, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை காரியாhலய பொறியியல் உதவியாளர் ஏம்.எம்.ஜாபிர், நீர்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் ஏ.எம்.எம்.ஜெர்பான் ஆகியோர்; விருந்தினர்களாகக் கலந் கொண்டனர்.

இதன்போது, சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் டி.சி.நிஷாதி அபே சேகர ஆகியோருக்கு அட்டாளைச்சேனை பிரதேச விவசாயக் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளும் நினைவுப் பொருட்களை வழங்கி கௌரவித்தனர்.

அட்டாளைச்சேனை கமநல சேவை மத்திய நிலையம் கமநல சேவை குழு மற்றும பிரதேச விவசாய அமைப்புக்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X