2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Sudharshini   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,ஐ.ஏ. ஸிறாஜ்


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவியுடன், பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (21) அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தில் fநடைபெற்று வருகின்றது.

காலை 8.மணிக்கு ஆரம்பமான இச்சேவை மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் ஆள் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுதல், பொதுமக்கள்  சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள பிரச்சினைகள்,  பற் சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவம், பொதுமக்களுக்கான பொதுச் சுகாதார பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்ட, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செலயாளர் ரீ.ஜே. அதிசயராஜ், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X