2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளராக பழீல் நியமனம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ. ஸிறாஜ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.எம். பழீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தத்தினை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடமிருந்து எஸ்.எல்.எம். பழீல் அண்மையில் முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எல்.எம்.பழீல்,  அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முதலாவது பல்கலைக்கழகப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.  

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X