Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீறியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலமை தொடர்பாக சனிக்கிழமை (21) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக இழு பறி நிலை ஏற்பட்ட போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சு பதவிகள் வழங்க வேண்டுமென ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தம் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸினால் மழுங்கடிக்கப்பட்டு வேறு வடிவில் வேறு கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 மாகாண சபை உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 06 உறுப்பினர்களும் இணைந்து சத்தியக் கடதாசி ஊடாக வழங்கிய ஆதரவு காரணமாக கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துள்ளோம் என தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago