Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸாருடன் அம்பாறை மின்சார சபையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட 6 பேரை அக்கரைப்பற்று பொலிஸார் சனிக்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆலையடிவேம்பு, பனங்காடு, ஆலங்குளம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுள் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆறு பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோமான முறையில் மின்சாரம் பெறுகின்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago