2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஐ.தே.க ஆதரவாளர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மருதமுனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மருதமுனை கலாசார மண்டபத்தில் திங்கட்;கிழமை(22) நடைபெற்றது.


ஐக்கிய தேசியக் கட்சி மத்திய சம்மேளனத் தலைவர் சம்சுல் அமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீர்ப்பாசன, வீடமைப்பு பிரதி அமைச்சர் அனோமா கமகே, கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான தயா கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், விவசாயத்துறை அபிவிருத்தி, வீடமைப்புத்திட்டம் அரச வைத்தியசாலைகள், பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்கள்  தொடர்பில் ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X