2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஐ.தே.கா.வின் மத்திய குழு காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

 
கல்முனை பிரதேசத்தின் கல்முனைக்குடி ஐக்கிய தேசியக் கட்சி மத்திய குழுக் காரியாலய திறப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) மாலை கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியில் இடம்பெற்றது.


இக்காரியாலய திறப்பு விழாவை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார கூட்டமும் கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.


ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைக்குடி அமைப்பாளர் எஸ்.எல்.எஸ்.முஹீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்  ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான தயா கமகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X