2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, லகுகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இறத்தல் பிரதேசத்தில் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொண்டுவரும் விவசாயிகளுக்கான காணி உறுதிபத்திரம்; வழங்குவதற்கு புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அமுல்படுத்துமாறு இறத்தல் விவசாய அமைப்பின் தலைவர் எம்.எம்.முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


லகுகல பிரதேச செயலாளர் பிரிவின் இறத்தல் பிரதேசத்தில் சுமார் 1000 ஏக்கர்களை பேமிட் காணியாக தொடர்ந்து விவசாயம் செய்து வரும் தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் இது வரையில் வழங்கப்படாமல் இனப் பாகுபாடு காட்டப்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.


கடந்த அரசாங்கத்தினால் இதற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என பலமுறை உறுதி வழங்கப்பட்டு வந்த போதிலும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக இருப்பதனால் இதற்கான முயற்சிகள் அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.


எமது காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாமையினால் காணி உரிமை மாற்றம் செய்வது மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத துரதிஷ்டவசமான நிலை தோன்றியுள்ளது.


எனவே புதிய அரசாங்கத்தின் 100 வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிபத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இக்காணிகளுக்கான விவசாயப்பாதைகள் மற்றும் வாய்க்கால்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X