2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

Kogilavani   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் இங்கு கொண்டுவரப்பட்டு ஒரு கிலோ கிராம் ரூபாய் 60க்கு நடமாடும் வியாபாரிகளினால் விற்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 80 முதல் ரூபாய் 90 வரையிலான விலையில் விற்கப்படுவதனால் இதற்கான கேள்வி குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு சந்தையில் விலையை குறைத்து விற்பதை போன்று, தம்மால் விலையை குறைக்க முடியாதென்றும் அவ்வாறு விற்பனை செய்தால் தாம் பாரியளவிலா நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X