2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சுகாதார இராஜாங்க அமைச்சர் பாலமுனைக்கு விஜயம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சிலினின் அழைப்பின் பேரில், சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி தலைமையிலான குழுவினர் இன்று (23) மாலை பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் சுகாதார இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி நியமிக்கப்பட்டதன் பின்னர், பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முதற்தடவையாக விஜயம்செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில்; மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்,  வைத்தியசாலையின் தரமுயர்வு தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளன.

சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி தலைமையிலான இக்குழுவில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X