2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட கிளைக்குழுக்களை புனரமைக்கும் வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கிளைக்குழுக்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதற்கமைய முதலாவது கிளைக்குழு புனரமைப்பு வேலை ஞாயிற்றுக்கிழமை(22) இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவின் வரிப்பத்தான் சேனை மஜீட் புரம் மற்றும் வரிப்பத்தான்சேனை முதலாம் மற்றும் மூன்றாம் பிரதேசங்களில் இடம்பெற்றன.

இதன்போது கட்சியின் எதிர்கால பணிகள், பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை அமைப்பாளர் எம்.சமூன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் இணைப்பதிகாரி சட்டத்தரணி எம்.எம்.பஹ்ஜி, கிழக்கு மாகாண அமைச்சரின் இணைப்பதிகாரி யூ.எல்.உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X