2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நெற்செய்கையை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்    


அம்பாறை, அக்கரைப்பற்று நுரைச்சோலை விவசாயக் கண்டத்தில் 1250 ஏக்கர் காணியில் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்செய்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் அக்கரைப்பற்று கிளையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இந்நுரைச்சோலை பிரதேசத்தில், சுமார் 500 விவசாயக் குடும்பங்கள் 1250 ஏக்கர் காணியில் பல வருடங்களாக நெற்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


சீனிக்கூட்டுத் தாபனத்தினால் கரும்புச்செய்கையை மேற்கொள்ளுமாறு பலவந்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவசாயிகள் அனைவரும் தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயம் (நெற்செய்கை) மேற்கொள்ளவே விரும்புகின்றனர்.


எனவே ஜனாதிபதியான நீங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, ஏழை விவசாயக் குடும்பங்களினது நன்மை கருதி இக்காணியில் நெற்செய்கை மேற்கொள்ள உதவுமாறு கோருகிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


அகில இலங்கை முஸ்லிம் லீக் அக்கரைப்பற்று கிளையின் தலைவரும் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளருமான எம்.ஐ.உதுமாலெவ்வையினால் ஒப்பமிடப்பட்ட இம்மகஜரின் பிரதி, அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் உயர்கல்வி அமைச்சருமான கபீர் ஹாஸிமுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதேச முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பிலான மகஜர் அனுப்பிவைக்கப்பட்டும் இதுகாலவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X