2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முதிரைகுற்றிகள் பறிமுதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் முதிரை மரக்குற்றிகளை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிவந்த இருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை செலுத்துமாறும் முதிரை மரக்குற்றிகளை பறிமுதல் செய்யுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் நேற்று, திங்கட்கிழமை(23) உத்தரவிட்டார்.

சவளக்கடை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சவளக்கடை பிரதான வீதியில் கடந்த மாதம் வீதிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 96 முதிரை மரக்குற்றிகளை கன்ரர் ரக வாகனத்தில சட்டவிரோதமாக ஏற்றிவந்த இருவரை கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றினர். அவ்விருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் வெளிவந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி 11ஆம் கொலனியைச் சேர்ந்த அவ்விருவரையும்  நேற்று திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டபோது இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும்

கைப்பற்றப்பட்ட ஒரு இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை அரசுடமையாக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X