2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இரு அமைச்சுக்களை வழங்குவதற்கான நடவடிக்கை கைகூடவில்லை

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிழக்கு மாகாண சபையின் இரு அமைச்சுக்களை வழங்குவதற்கு திங்கட்கிழமை(23) முதலமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கைகூடவில்லையென கிழக்கு மாகாண சபையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை வகித்தவருக்கு அதே அமைச்சுப் பதவியையும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு விவசாய அமைச்சும் வழங்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


முதலமைச்சரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுனரிடம் இவர்களுக்கான அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குமாறு கேட்கப்பட்ட போதிலும் ஆளுனர் தான் கொழும்புக்கு அவசர வேலையின் நிமிர்த்தம் செல்ல வேண்டியிருப்பதாக தெரிவித்து சென்றுவிட்டதாகவும் இதனால் அமைச்சுப்பதவிகளை வழங்க எடுத்த நடவடிக்கை கைகூடவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் கடும் பிரயத்தனங்களை முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்   முன்னெடுத்துவருகின்றன.
மேலும் முஸ்லிம் காங்கிஸின் இவ்வாறான செயற்பாடு காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை(24) அவசர முடிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X