2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறையில் நெல் உற்பத்தி 20 சதவீதம் வீழ்ச்சி

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் இம்முறை பெரும்போக நெற்செய்கையிலிருந்து எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லையென நெற்செய்கைக்கான பாடவிதான உத்தியோகஸ்தர் ஏ.எல்.முபாறக், செவ்வாய்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 156,000 ஏக்கர்களில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தால் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகள் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறாமலும், உதாசீனம் செய்தும் நவீன முறைகளை மேற்கொள்ளாது, பாரம்பரிய முறைகளையே இன்னும் பின்பற்றிவருவது நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக உள்ளது.

மொத்த தேசிய நெல் உற்பத்தியில் 20 சதவீதம் பங்களிப்பை வழங்கி வரும் அம்பாறை மாவட்டத்தில் மேலும் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை விவசாய திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X