Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது நூலக வீதி அல்-அமீன் சந்தியில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்யக்கோரி பிரதேசவாசிகள் கல்முனை மாநகர சபைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவதற்கு செவ்வாய்க்கிழமை (24) முற்பட்ட வேளை கல்முனை பொலிஸார் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இவ்விடயம் குறித்து ஏற்கெனவே கல்முனை மாநகர சபை, கல்முனை பொலிஸ் நிலையம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினாலேயே இப்போராட்டத்தை தாம் மேற்கொள்ள முற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு வருகைதந்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் இவ்வீதியில் இன்றிலிருந்து குப்பைகளை கொட்டவிடாது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென உறுதி மொழி வழங்கப்பட்டதையடுத்து இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பிரதேசவாசிகளினால் இவ்விடயம் சம்பந்தமான மகஜரும் கையளிக்கப்பட்டது.
ஓரிரு தினங்களுக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தர தவறும் பட்சத்தில் கைவிடப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என குறித்த அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago