2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மு.கா. உறுப்பினர் மாஹிரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரை போட்டியிடுமாறு அறபா மகளிர் சங்க பிரதிநிதிகளும் சங்கத்தின் அங்கத்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்மாந்துறை சென்னல் கிராமத்திலுள்ள அறபா மகளிர் சங்க பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கடந்த 9 வருட காலமாக இயங்கி வருகின்ற இவ்வமைப்பின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் சுயதொழில் முயற்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான எம்.ரி.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை தபால் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.யுனைதீன், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.ஏ.நஸார், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவலக இணைப்பாளர் எம்.ஜே.எம்.இர்பான் மௌலவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X