Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தங்களுக்குள் தாங்களே போட்டுக்கொண்ட இன முரண்பாட்டு முள்வேலியை அகற்றவேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப்பூமியான இது, தனியே தமிழ் மக்களுக்கு உரித்தானதோ அல்லது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானதோ அல்லது வேறு யாருக்கும் உரித்தானதோ அல்ல. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப்பூமி இது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு இன ஐக்கியத்துடன் வாழப் பழகவேண்டும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் குறைநிறைகளை கேட்டறியும் நோக்கில் அவ்வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (23) மாலை விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், இங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'1970ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்விரு இனங்களும் இவ்வாறிருக்கவில்லை. நாம் ஒன்றாக ஒரு வகுப்பில் படித்தவர்கள், பழகியவர்கள். இன்று சிறு, சிறு பிரச்சினைகளுக்காக எங்களுக்குள் ஒரு முள்வேலியை போட்டுக்கொண்டிருக்கின்றோம். இது எமக்குள் தேவையில்லாத பிரிவாகும். இதை நாம் அனைவரும் சிந்தித்து களைந்து எடுக்கவேண்டும்.
நான் நிந்நவூர் பிரதேசத்தை சேர்ந்தவன். பத்து வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். என்னிடம் பக்கத்து பிரதேசமான காரைதீவு மக்கள் தங்கள் ஊருக்கு உதவி கேட்டுவரவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய நோக்கமும் தமிழ் மக்களின் அரசியல் பயணமும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. நாங்களும் கூறுகின்றோம் இந்த வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம். இதுவே முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை கோட்பாடாகும்.
இன்று புதிய அத்தியாயத்தை நாம் தோற்றுவித்துள்ளோம். நீங்கள் எந்த தயக்கமும் இல்லாமல், தங்களின் தேவைகளை கேட்டு பெறமுடியும். தற்போது எனது அமைச்சின் ஊடாக தமிழ்க்கிராமங்களில் நடைபெறுகின்ற திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செய்வதற்கு நான் முடிவு எடுத்துள்ளேன். இதன் மூலம் எமது இன ஐக்கியத்தை கட்டியெழுப்பமுடியும் என்று நான் நம்புகின்றேன்' என்றார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago