2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பெயர் பட்டியலை அனுப்புமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்


அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளுராட்சி மன்ற ஊழியர்களுக்கு உடனடியாக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளதால் இதுவரை மோட்டார் சைக்கிள் பெறாதவர்களுடைய பெயர் பட்டியலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு சகல உள்ளுராட்ச மன்ற ஆணையாளர்களையும் அரசாங்க நிர்வாக,,மாகாண சபைகள்,உள்ளுராட்சி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் கே.ஏ.சுபத்தரா வெல்பொல கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக சகல உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கையிலே அவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கிராம மட்டத்தில் அரச ஊழியர்களின் சேவையை  வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு அவர்களுக்கு இரண்டாம்  கட்டமாக சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


எனவே கால தாமதம் இன்றி இதனை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இதுகுறித்து சகல உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்களும் கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X